Pattampoochi Kupidum Bothu Poove Odathae
Kadhal Thaenai Saapidum Bothu Pesa Kudadhae
Pataampoochi Kupidum Bothu Poovey Oodadhae
Kadhal Thenai Saapidum Bothu Pesa Kudadhae
Yaanai Thanthathin Silai Neeye
Dhinam Yerum Thangathin Vilai Neeye
Kaadhal Veesiya Valai Neeye
Ennai Katti Ilukaadhae
Pataampoochi Kupidum Bothu
Poovey Odadhae
Kaadhal Thenai Sapidum Bothu
Pesa Koodathae
Yethai Tharuvathu Naan Endru
Yethai Peruvathu Thaan Endru
Kurukum Nedukum Kuzhandhai Pola
Idhayam Kudhithoda
Thalai Asaikuthu Un Kangal
Thavi Thavikuthu En Nenjam
Oruthi Pola Oruthi Vanthu
Uyirai Panthaada
Niyaabagam Un Niyaabagam
Adhu Mudiyaadha Mudhalaagum
Poomugam Un Poomugam
Adhu Mudiyaadha Mudhalpaagam
Pen Kavidhai Ival Thaanae
Un Idhazhaal Padippaayo
Kan Imaiyaal Ennai Maari
Kadhal Thirappaayo
Pattaampoochi Kupidum Bothu
Poove Oodadhae
Hoi Hoi Kaadhal Thaenai
Saapidum Pothu Pesa Kudathae
Alai Varisaiyil Nee Sirikka
Tholai Thodarbinil Naan Iruka
Uthadum Uthadum Pesum Pozhudhu
Ulagai Maranthaene
Unadhauginil Naan Iruka
Uyir Kuzhathinil Poo Mulaika
Irandaam Muraiyaai Idhayam Thudika
Puthithaai Piranthenae
Maalaiyil Pon Malaiyil
Un Madi Meedhu Vizhuveney
Maarbinil Un Maarbinil
Naan Maruthaani Mazhai Thaaney
Vennilavo Nedunthooram
Pen Nilavo Thodum Thooram
Un Mazhayil Nanainthaale
Kaichal Parandhodum
Pattaamboochi Kupidum Bothu
Poove Odathey
Kadhal Thenai Sapidum Bothu
Pesa Koodadhey
Yaanai Thanthathin Silai Neeye
Dhinam Yerum Thangathin Vilai Neeye
Kaathal Veesiya Valai Neeyey
Ennai Katti Ilukaadhey
Tamil Font
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும் போது பேச கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும் போது பேச கூடாதே
யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னை கட்டி இழுக்காதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும் போது
பேச கூடாதே
எதை தருவது நான் என்று
எதை பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலை அசைக்குது உன் கண்கள்
தாவி தவிக்குது என் நெஞ்சம்
ஒருத்தி போல ஒருத்தி வந்து
உயிரை பந்தாட
நியாபகம் உன் நியாபகம்
அது முடியாது முதலாகும்
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாது முதல்பாகம்
பெண் கவிதை இவள் தானே
உன் இதழால் படிப்பாயோ
கண் இமையால் என்னை மாறி
காதல் திறப்பாயோ
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
ஹோய் ஹோய் காதல் தேனை
சாப்பிடும் போது பேச கூடாதே
அலை வரிசையில் நீ சிரிக்க
தொலை தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் பொழுது
உலகை மறந்தேனே
உனதருகினில் நான் இருக்க
உயிர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க
புதிதாய் பிறந்தேனே
மாலையில் பொன் மாலையில்
உன் மடி மீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழை தானே
வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும் போது
பேச கூடாதே
யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னை கட்டி இழுக்காதே