Vaali

Vidhiyaa Vidhavayaa Song Lyrics

Vidhiyaa Vidhavayaa Tamil Song Lyrics From Thambi Durai Movie Starring Saravanan and Sukanya in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan. Vidhiyaa Vidhavayaa lyrics are penned by Vaali.

Vidhiyaa Vidhavaiyaa
Vinaiyin Kodumaiyaa
Sadhiyin Karangalil
Ival Oar Padhumaiyaa
Enna Kolam Idhu
Soga Chumai
Kanneerk Kadhai
Pengal Nilai

Vidhiyaa Vidhavaiyaa
Vinaiyin Kodumaiyaa

Manadhirkkugandha
Kanavan Kidaikka
Sumangaliyaai Aanaval
Kidaitha Kanavan
Pizhaithu Irukka
Amangaliyaai Ponaval

Malargal Mudikka
Thalaivan Irundhum
Malar Izhandhaal Poongodi
Valaiyal Vazhanga
Thunaivan Irundhum
Valai Izhandhaal Paningili

Poovum Vanna Pottum
Indha Pennai Neengalaamaa
Kaimbpenn Endra Vedam
Indha Penmai Thaangalaamaa
Nyaayangale
Poiyaavadhaa
Maayangale
Meiyaavadhaa

Vidhiyaa Vidhavaiyaa
Vinaiyin Kodumaiyaa

Kudumba Vilakkai
Theruvil Niruthi
Varuthuvadhu Needhiyaa
Vasantha Paravai
Veluthap Pudavai
Uduthuvadhu Nermaiyaa

Aduthu Kedukkum
Kodiya Manangal
Uyarathile Vaazhvadhaa
Punidham Niraindha
Manidha Uyirgal
Tharaiyinile Veezhvadhaa

Thaayi Magamaayi
Vandhu Neeye Kaakka Vendum
Soozhi Mannil Saaya
Kaiyil Soolam Thookka Vendum
Unai Nambiye
Penn Jenmame
Poraadudhe
Badhil Vendume

Vidhiyaa Vidhavaiyaa
Vinaiyin Kodumaiyaa
Sadhiyin Karangalil
Ival Oar Padhumaiyaa
Enna Kolam Idhu
Soga Chumai
Kanneerk Kadhai
Pengal Nilai

Vidhiyaa Vidhavaiyaa
Vinaiyin Kodumaiyaa
Sadhiyin Karangalil
Ival Oar Padhumaiyaa

விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது
சோகச் சுமை
கண்ணீர்க் கதை
பெண்கள் நிலை

விதியா விதவையா
வினையின் கொடுமையா

மனதிற்குகந்த கணவன் கிடைக்க
சுமங்கலியாய் ஆனவள்
கிடைத்த கணவன் பிழைத்து இருக்க
அமங்கலியாய்ப் போனவள்

மலர்கள் முடிக்க
தலைவன் இருந்தும்
மலர் இழந்தாள் பூங்கொடி
வளையல் வழங்க
துணைவன் இருந்தும்
வளை இழந்தாள் பைங்கிளி

பூவும் வண்ணப்பொட்டும்
இந்தப் பெண்ணை நீங்கலாமா
கைம்பெண் என்ற வேடம்
இந்தப் பெண்மை தாங்கலாமா
நியாயங்களே
பொய்யாவதா
மாயங்களே
மெய்யாவதா

விதியா விதவையா
வினையின் கொடுமையா

குடும்ப விளக்கை
தெருவில் நிறுத்தி
வருத்துவது நீதியா
வசந்தப் பறவை
வெளுத்தப் புடவை
உடுத்துவது நேர்மையா

அடுத்துக் கெடுக்கும்
கொடிய மனங்கள்
உயரத்திலே வாழ்வதா
புனிதம் நிறைந்த மனித உயிர்கள்
தரையினிலே வீழ்வதா

தாயி மகமாயி வந்து
நீயே காக்க வேண்டும்
சூழ்ச்சி மண்ணில் சாய
கையில் சூலம் தூக்க வேண்டும்
உனை நம்பியே
பெண் ஜென்மமே
போராடுதேஓ
பதில் வேண்டுமே

விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது
சோகச் சுமை
கண்ணீர்க் கதை
பெண்கள் நிலை

விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா