Thanigai Selvan

Vegu Kalam Ingu Song Lyrics

“Vegu Kalam Ingu” Song Lyrics From “Oomai Janangal(1984)” Movie Composed by Gangai Amaran and Sung by Malaysia Vasudevan and Poorani. The Vegu Kalam Ingu Lyrics are Penned by Thanigai Selvan.

Vegu Kalam Ingu Paayuthengal Vervai
Oru Naalil Kaana Vendum Nalla Vaazhvai

Pon Pookkum Maamalai
Porththirukku Pasumai Theyilai
Endraalum Engal Aadai Kanthale
Oru Naal Varumaa Thirunaale
Oru Naal Varumaa Thirunaale

Vegu Kalam Ingu Paayuthengal Vervai
Oru Naalil Kaana Vendum Nalla Vaazhvai

Jaathi Madha Mozhiyil Aayiram
Pedham Kaanalaam
Yezhaigalin Kudisai Koyile
Pedham Yedhadaa
Rodhaiyile Veguthe Thegam Theeyile

Kaadugalile
Kaadugalile Koodugal Thedum Kooligal
Kannaadi Veettil Maadi Vaasigal

Mazhaiyin Kanneer Oru Aaraagum
Theneer Engal Kanneeraagum

Vegu Kaalam Ingu Paayuthengal Vervai
Oru Naalil Kaana Vendum Nalla Vaazhvai

Aariraaro Aariraaro Aariraaro Aaro
Aariraaro Aariraaro Aariraaro Aaro

Seriyin Mazhalai Thaayidam
Odum Pothilum
Theyilaiyin Pothiyai Ennave
Sollum Melidam
Oar Uravai Enniye Engum Pennmanam

Maalaithanile
Maalaithanile Velaigal Oyum Nerame
Vidikaalai Kaanum Naalai Vaaname

Malaiyin Madiyil Varum Senneere
Pala Naal Uzhaippaal Kaanum Theneere

Vegu Kaalam Ingu Paayuthengal Vervai
Oru Naalil Kaana Vendum Nalla Vaazhvai

Pon Pookkum Maamalai
Porththirukku Pasumai Theyilai
Endraalum Engal Aadai Kanthale
Oru Naal Varumaa Thirunaale
Oru Naal Varumaa Thirunaale

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே
ஒரு நாள் வருமா திருநாளே

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

ஜாதிமத மொழியில் ஆயிரம்
பேதம் காணலாம்
ஏழைகளின் குடிசை கோயிலே
பேதம் ஏதடா
ரோதையிலே வேகுதே தேகம் தீயிலே

காடுகளிலே
காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்
கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்

மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்
தேநீர் எங்கள் கண்ணீராகும்

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ

சேரியின் மழலை தாயிடம்
ஓடும் போதிலும்
தேயிலையின் பொதியை எண்ணவே
சொல்லும் மேலிடம்
ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்

மாலைதனிலே
மாலைதனிலே வேலைகள் ஓயும் நேரமே
விடிகாலை காணும் நாளை வானமே

மலையின் மடியில் வரும் செந்நீரே
பல நாள் உழைப்பால் காணும் தேநீரே

வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை

பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே
ஒரு நாள் வருமா திருநாளே

“VEGU KALAM INGU” SONG DETAILS
Starring: K. Bhagyaraj, Chandrasekhar and Urvashi
Music: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Poorani
Lyricist: Thanigai Selvan