“Oruvanukku Oruthiyena” Song Lyrics From “Kavalan Avan Kovalan(1987)” Movie Starring Prabhu, Rekha and Visu in the Lead Roles. The Song is composed by Vijayanand and Sung by K. S. Chithra and Vani Jairam. The Oruvanukku Oruthiyena Lyrics are Penned by Vaali.
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Vannamayil Kannagiyum Naane
Silambin Mani Sithara Manam Sithara
Thalaivan Avan Thirusabaiyil
Nadanamidum Maadhaviyum Naane
Malareduththu Kuzhal Mudiththu
Manavaraiyil Karam Pidiththa
Kula Magalum Kuna Magalum Ivale
Kanigai En Per Irunthum
Kanavar Ena Oruvar Vasam
Saranadaintha Sarasa Magal Ivale
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Vannamayil Kannagiyum Naane
Naan Potta Maalai Ennaalume
Nee Theenda Koodaathu Podi
Naalthorum Maalai Un Kaavalan
Vanthaane En Vaasal Thedi
Naanangal Yedhum Illaathaval
Pennalla Peyallavo
Pasi Vantha Velai Theerkkaathaval
Kaniyalla Kaayallavo
Aduththavalin Kudiththanaththil
Idam Pidiththal Muraiyaa
Oru Mugaththil Iru Vizhigal
Iruppathenna Thavaraa
Enakkenave Piranthavandi
Idaiyil Ennai Kalanthavandi
Iniyum Intha Virasamenna
Iruvarukkul Sarasamenna
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Kannin Mani Rukkumani Naane
Thalaivan Radham Nadaththa
Samar Kalaththil Vadam Pidiththa
Vanithai Intha Bhaamaa Enum
Azhagu Nalar Thaane
Kaiyodu Yenthum Pullaanguzhal
Adhu Pola Naan Konda Sontham
Kannaana Kannan Brinthaavanam
Ennaalum Bhaamavin Bantham
Neeraadum Gangai Naanallavo
En Pol Neeyaagumo
Aanantha Vellam Naanthaanadi
Yamunaikku Eedaagumo
Enakkirukkum Urimaiyinai
Parippathenna Muraiyo
Oru Nadhiyai Iru Karaiyum
Thazhuvuvathu Thavaro
Kadal Kalantha Nadhi Idhuthaan
Udan Inaintha Vidhi Idhuthaan
Iniyum Antha Mayakkamenna
Iruvarukkul Nerukkamenna
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Paruva Magal Pommi Ivalthaane
Thalaivan Manamarinthu Kunamarinthu
Malarpadukkai Viriththu Vaiththa
Vadivazhagi Vellaiyammaa Naane
Thenpaandi Veeran En Mannavan
Naan Mattum Kondaadum Devan
Naanenna Solla En Nenjilum
Neengaamal Vaazhgindra Jeevan
Naan Konjum Meni Ennaalumee
Nee Konja Koodaathadi
Un Mannan Vanthaal Ennaalume
Vaasal Moodaathadi
Purushan Enna Palar Virumbum
Podhuvudamai Porulaa
Iru Manaivi Muruganukku
Iruppathenna Thavaraa
Manitharellaam Iravaalla
Unairchchiyillaa Maramumalla
Vilakkavurau Ini Edharkkau
Vilagi Vidu Vazhakkedharkkau
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Mudhal Vedu En Veeduthaane
Iravil Nilaverikka Kuliredukka
Iru Karaththil Aravanaikka
Chinna Veedu En Veeduthaane
Ulagariya Oorariya Arunthathiyum Thaanariya
Samsaaram Ennaalum Ivale
Aduththavarum Ariyaamal
Veeraarkkum Theriyaamal
Aanantham Tharupavalum Ivale
Oruvanukkku Oruththiyena
Uravu Kolla Urimai Ulla
Mudhal Veedu En Veeduthaane
Prabhu
Anbe
Prabhu
Anbe
Prabhu
Anbe
Prabhu
Anbe
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
வண்ணமயில் கண்ணகியும் நானே
சிலம்பின் மணி சிதற மனம் சிதற
தலைவன் அவன் திருச்சபையில்
நடனமிடும் மாதவியும் நானே
மலரெடுத்து குழல் முடித்து
மணவறையில் கரம் பிடித்த
குல மகளும் குண மகளும் இவளே
கனிகை என பேர் இருந்தும்
கணவர் என ஒருவர் வசம்
சரணடைந்த சரச மகள் இவளே
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
வண்ணமயில் கண்ணகியும் நானே
நான் போட்ட மாலை எந்நாளுமே
நீ தீண்டக் கூடாது போடி
நாள்தோறும் மாலை உன் காவலன்
வந்தானே என் வாசல் தேடி
நாணங்கள் ஏதும் இல்லாதவள்
பெண்ணல்ல பேயல்லவோ
பசி வந்த வேளை தீர்க்காதவள்
கனியல்ல காயல்லவோ
அடுத்தவளின் குடித்தனத்தில்
இடம் பிடித்தல் முறையா
ஒரு முகத்தில் இரு விழிகள்
இருப்பதென்ன தவறா
எனக்கெனவே பிறந்தவன்டி
இடையில் என்னை கலந்தவன்டி
இனியும் இந்த விரசமென்ன
இருவருக்குள் சரசமென்ன
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
கண்ணின் மணி ருக்குமணி நானே
தலைவன் ரதம் நடத்த
சமர் களத்தில் வடம் பிடித்த
வனிதை இந்த பாமா எனும்
அழகு மலர் தானே
கையோடு ஏந்தும் புல்லாங்குழல்
அது போல நான் கொண்ட சொந்தம்
கண்ணான கண்ணன் பிருந்தாவனம்
எந்நாளும் பாமாவின் பந்தம்
நீராடும் கங்கை நானல்லவோ
என் போல் நீயாகுமோ
ஆனந்த வெள்ளம் நான்தானடி
யமுனைக்கு ஈடாகுமோ
எனக்கிருக்கும் உரிமையினை
பறிப்பதென்ன முறையோ
ஒரு நதியை இரு கரையும்
தழுவுவது தவறோ
கடல் கலந்த நதி இதுதான்
உடன் இணைந்த விதி இதுதான்
இனியும் அந்த மயக்கமென்ன
இருவருக்குள் நெருக்கமென்ன
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
பருவ மகள் பொம்மி இவள்தானே
தலைவன் மனமறிந்து குணமறிந்து
மலர்ப்படுக்கை விரித்து வைத்த
வடிவழகி வெள்ளையம்மா நானே
தென்பாண்டி வீரன் என் மன்னவன்
நான் மட்டும் கொண்டாடும் தேவன்
நானென்ன சொல்ல என் நெஞ்சிலும்
நீங்காமல் வாழ்கின்ற ஜீவன்
நான் கொஞ்சும் மேனி எந்நாளுமே
நீ கொஞ்சக் கூடாதடி
உன் மன்னன் வந்தால் எந்நாளுமே
என் வாசல் மூடாதடி
புருஷன் என்ன பலர் விரும்பும்
பொதுவுடைமை பொருளா
இரு மனைவி முருகனுக்கு
இருப்பதென்ன தவறா
மனிதரெல்லாம் இறைவனல்ல
உணர்ச்சியில்லா மரமுமல்ல
விளக்கவுரை இனி எதற்கு
விலகி விடு வழக்கெதற்கு
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
முதல் வீடு என் வீடு தானே
இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க
இரு கரத்தில் அரவணைக்க
சின்ன வீடு என் வீடுதானே
உலகறிய ஊரறிய அருந்ததியும் தானறிய
சம்சாரம் எந்நாளும் இவளே
அடுத்தவரும் அறியாமல்
வேறார்க்கும் தெரியாமல்
ஆனந்தம் தருபவளும் இவளே
ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
முதல் வீடு என் வீடு தானே
இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க
இரு கரத்தில் அரவணைக்க
சின்ன வீடு என் வீடுதானே
பிரபு
அன்பே
பிரபு
அன்பே
பிரபு
அன்பே
பிரபு
அன்பே
“ORUVANUKKU ORUTHIYENA” SONG DETAILS
Starring: Prabhu, Rekha and Visu
Music: Vijayanand
Singers: K. S. Chithra and Vani Jairam
Lyricist: Vaali