Vaali

Nandri Solla Unakku Song Lyrics

Nandri Solla Unakku Song Lyrics From Maru Malarchi Movie Composed by S. A. Rajkumar and Sung by Hariharan and Amrutaa. The Nandri Solla Unakku Lyrics are Penned by Vaali.

Song Details
Starring: Mammootty, Devayani
Music: S. A. Rajkumar
Singers: Hariharan and Amrutaa

Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naanthaan Mayanguren

Kaalamulla Varaikkum
Kaaladiyil Kidakka
Naanthaan Virumburen

Nedungaalam Naan Puruncha
Thavaththaale Nee Kedachcha
Pasumponna Piththalaiyaa
Thavaraaga Naan Nenachchen
Neril Vantha Aandavane

Oorairiya Unakku Maalaiyitta Piragu
Yenma Sanjalam
Unnudaiya Manasum Ennudaiya Manasum
Ondraai Sangamam

Sevvelani Naan Kudikka
Seeviyathai Nee Kodukka
Sinthiyathu Raththamilla
Enthan Uyir Thaan

Kallirukkum Thaamaraiya
Kaiyanaikkum Vaan Piraiya
Ullirukkum Naadiyengum
Unthan Uyir Thaan

Inivarum Entha Piraviyilum
Unaichera Kaathiruppen
Vizhi Moodum Imai pola
Vilagaamal Vaazhnthiruppen

Unna Pol Deivam illa
Ullam Pola Kovil Illa
Dhinamthorum Archanaithaan
Enakku Vera Velai illa

Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naanthaan Mayanguren

Unnudaiya Manasum
Ennudaiya Manasum
Ondraai Sangamam

Vangakkadal Aalam Enna
Vallavargal Kandathundu
Anbukkadal Aalam Yarum Kandathillaiye

Ennudaiya Naayagane
Oor Vanangum Nallavane
Unnudaiya Anbukku
Antha Vaanam Ellaiye

Enakkena Vantha Devathaiye
Saripaathi Neeyallavaa
Nadakkaiyil Unthan Kooda Varum
Nizhal Pole Naanallavaa

Kannan Konda Raathaiyena
Raaman Konda Seethaiyena
Madi Serntha Pooraname
Manathil Veesum Maaruthame

Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naanthaan Mayanguren

Ennudaiya Manasa
Thanthu vitta Piragum
Yenma Kalangura

Nedungaalam Naan Puruncha
Thavaththaala Nee Kedachcha
Thirukkovil Veeduyendru
Vizhaketra Neeyum Vantha
Neril Vantha Aandavane

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்புறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கெடச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

செவ்வெளனி நான் குடிக்க
சீவியதை நீ குடுக்க
சிந்தியது ரத்தமில்ல
எந்தன் உயிர் தான்

கல்லிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான் பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர் தான்

இனிவரும் எந்த பிறவியிலும்
உனைச்சேர காத்திருப்பேன்
விழி மூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

உன்ன போல தெய்வம் இல்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினம்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

வங்கக்கடல் ஆழம் என்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே

என்னுடைய நாயகனே
ஊர்வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே

எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போல நான் அல்லவா

கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

நெடுங்காலம் நான் புறுஞ்ச
தவத்தால நீ கெடச்ச
திருக்கோயில் வீடு என்று
விளக்கேற்ற நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே