Mandram Vandha Thendralukku From Mouna Ragam Movie. The Song was Composed by Ilaiyaraaja and Sung by S.P. Balasubrahmanyam. The Lyrics are penned by Vaali.
Mandram Vandha Thendralukku Song Details
Song Name | Mandram Vandha Thendralukku |
Movie | Mouna Ragam |
Starring | Mohan and Revathi |
Music | Ilaiyaraaja |
Singer | S.P. Balasubrahmanyam |
Lyricist | Vaali |
Music Label | Echo Records |
Mandram Vandha Thendralukku Lyrics in Tamil
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
மேடையை போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகி செல்ல
ஓடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாலமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே