Kannadasan

Jeyithukonde Iruppen Song Lyrics

Jeyithukonde Iruppen Song Lyrics From Dharma Raja(1980) Movie composed by M. S. Viswanathan and Sung by T. M. Soundararajan. The Jeyithukonde Iruppen Lyrics are Penned by Kannadasan.

Jeyiththukkonde Iruppen

Jeyiththukkonde Iruppen
En Dhesaththin Per Kaakka
Uzhaiththu Konde Irupen
Ulagangal Paaraatta

Jeyiththukkonde Iruppen
En Dhesaththin Per Kaakka
Uzhaiththu Konde Irupen
Ulagangal Paaraatta

Annai Bhoomiyil Aadum Kodithanai
Ulagam Vanangida Kaattuven
Anbe Perithenum Manthiramthanai
Enagal Vaazvena Naattuven
Jaihind Jeya Jeya Japan
Jaihind Jeya Jeya Japan

Chinnaj Siriya Jappan Nadu
Enna Munnettram
Thedum Thozhiloru Kodi Kodi
Kaanum Poonthottam

Chinnaj Siriya Japan Nadu
Enna Munnettram
Thedum Thozhiloru Kodi Kodi
Kaanum Poonthottam

Vannam Minnum Azhagiya Pengal
Thullum Maanaattam
Vaanam Thazhuvum Kattidam Kanden
Sorkka Therottam

Engal Thaayagam Melum Uyarnthida
Intha Anupavam Pothume
Makkal Sakthiyil Bharatham
Intha Mandalaththinai Vellume
Jaihind Jeya Jeya Japan

Jeyiththukkonde Iruppen
En Dhesaththin Per Kaakka
Uzhaiththu Konde Irupen
Ulagangal Paaraatta

Kaalai Ezhunthathum Aanum Pennum
Enna Thudithudippu
Kaalum Kaiyum Enthiram Pole
Enna Surusuruppu

Palli Kuzhanthaikkum Dhesaththin Meedhu
Iniyilaa Madhippu
Paarkka Paarkka Tokiyo Nagaram
Engum Kalakalappu

Engal Thaayagam Melum Uyarnthida
Intha Anupavam Pothume
Makkal Sakthiyil Bharatham
Intha Mandalaththinai Vellume
Jaihind Jeya Jeya Japan

Jothi Mayamaai Thondruthu Inge
Enna Minsaaram
Jothi Mayamaai Thondruthu Inge
Enna Minsaaram
Thozhilil Kooda Udhavi Seigindraal
Nalla Samsaaram

Uzhaikkathavane Illai Enpathu
Ulagukkoru Paadam
Ulaga Santhaiyil Japan Porule
Odi Vilaiyaadum

Engal Thaayagam Melum Uyarnthida
Intha Anupavam Pothume
Makkal Sakthiyil Bharatham
Intha Mandalaththinai Vellume
Jaihind Jeya Jeya Japan

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட

அன்னை பூமியில் ஆடும் கொடிதனை
உலகம் வணங்கிடக் காட்டுவேன்
அன்பே பெரிதெனும் மந்திரம்தனை
எங்கள் வாழ்வென நாட்டுவேன்
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம்

சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம்

வண்ணம் மின்னும் அழகிய பெண்கள்
துள்ளும் மானாட்டம்
வானம் தழுவும் கட்டிடம் கண்டேன்
சொர்க்கத் தேரோட்டம்

எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட

காலை எழுந்ததும் ஆணும் பெண்ணும்
என்ன துடிதுடிப்பு
காலும் கையும் எந்திரம் போலே
என்ன சுறுசுறுப்பு

பள்ளிக் குழந்தைக்கும் தேசத்தின் மீது
இணையிலா மதிப்பு
பார்க்க பார்க்க டோக்கியோ நகரம்
எங்கும் கலகலப்பு

எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
தொழிலில் கூட உதவி செய்கின்றாள்
நல்ல சம்சாரம்

உழைக்காதவனே இல்லை என்பது
உலகுக்கொரு பாடம்
உலகச் சந்தையில் ஜப்பான் பொருளே
ஓடி விளையாடும்

எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்

Jeyithukonde Iruppen Song Details:
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, K. Balaji and Major Sundarrajan
Music: M. S. Viswanathan
Singer: T. M. Soundararajan
Lyricist: Kannadasan