Starring: Jayam Ravi, Trisha
Music: Devi Sri Prasad
Singer: S. P. Balasubrahmanyam
Aagayam Ithanai Naal
Manmeethu Veezhaamal
Thoonaaga Thaanguvathu
Kadhal Thaan
Aandaandu Kaalangal
Bhoologam Poo Pookka
Azhagaana Kaaraname
Kadhal Thaan
Panja Boothangal Yaavum Kadhalin Adimai
Naatkal Yezhum Kadhalin Kizhamai
Onbathu Kolgalum Kadhalai Sutrivarum
Maram Yera Yeniyai Thanthaal
Malaiyil Yeri Kodi Yetrum
Gundoosi Kaiyil Thanthaal
Kinare Thondividum
Verum Kallai Vaira Kallaai
Kadhal Paarvai Maatrividum
Venneeril Vittaal Kooda
Kadhal Meen Neenthum
Kashtam Kadhalukku Ishtam
Vetri Pera Vendum Endraal
Kadhal Ethaiyum Thaangidumae
Muttum Kadhavugalai Thattum
Sarukki Vizhum Paadhai Ellaam
Vetri Padiyaai Maatridume
Annaanthu Paarkkaamal
Vinmeenai Veezhthividum
Thunaiyaarum illaamal
Jeithidume
Idhu Neruppil Seitha
Irumbu Vazhaiyame
Iru Manam Virumbi
Thuninthu Udaiyume
Bayangalum Thayakkamum
Vidumurai Eduthidume
Verodu Vervai Ootri
Kadhal Endrum Vendruvidum
Veriyodu Odum Pothu
Thadaiyai Udaithuvidum
Kadal Neerai Thekkum Pothu
Uppaai Thaane Maarividum
Kanneerai Thekkum Kadhal
Muththaai Maatrividum
Kadhal Kettu Kondu Varumaa
Thottathukkul Paravai Vandhaal
Veli Enna Thaduthidumaa
Kadhal Kaattu Chedi Pole
Kattalaigal Podum Pothum
Pookkal Pookka Maruthidumaa
Puli Vaazhum Kugai Ulle
Kizhi Vaalum Veeraththai
Manathodu Thanthidume
Kaadhal Thaan
Ithu Pogum Vazhiyo Vetru Paathai
Thirumbum Vazhiyo Vetri Paathai
Virumbiya Idhayathai
Adainthidum Payanam Ithu
Kadal Thaandum Paravaikkellaam
Vazhiyil Marangal Kidaiyaathu
Aanaalum Kandam Thaandum
Siragugal Valikkaathu
Malai Yerum Erumbin Kaalgal
Veiyilai Mithiththu Udaiyaathu
Manathodu Kadhal Vandhaal
Manitha Thadai Yethu
ஆகாயம் இத்தனை நாள்
மண்மீது வீழாமல்
தூணாக தங்குவது
காதல் தான்
ஆண்டாண்டு காலங்கள்
பூலோகம் பூ பூக்க
அழகான காரணமே
காதல் தான்
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும்
காதலை சுற்றிவரும்
மரம் ஏற ஏணியை தந்தால்
மலையில் ஏறி கொடி ஏற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கினரே தோண்டிவிடும்
வெறும் கல்லை வைர கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்
கஷ்டம் காதலுக்கு இஷ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தங்கிடுமே
முட்டும் கதவுகளை தட்டும்
சறுக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றி படியாய் மாற்றிடுமே
அண்ணாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல்
ஜெய்திடுமே
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இரு மனம் விரும்பி துணிந்து உடையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே
வேறோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்றுவிடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்துவிடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்
காதல் கேட்டுக்கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டு செடி போலெ
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா
புலி வாழும் குகை உள்ளே
கிளி வாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே
காதல் தான்
இது போகும் வழியோ வெற்று பாதை
திரும்பும் வழியோ வெற்றி பாதை
விரும்பிய இதயத்தை
அடைந்திடும் பயணம் இது
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது
மலை ஏறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால்
மனிதா தடையேது